யுஎஸ் வேலைவாய்ப்பு அறிக்கையால் இந்திய பங்குச் சந்தையில் சரிவு
Subscribe to Oneindia Tamil

ஒட்டுமொத்த ஆசிய பங்குச் சந்தையே 2.19 சதவிகிதம் இன்று வீழ்ச்சி கண்டது.
இந்தியாவின் சென்செக்ஸில் 374.44 புள்ளிகள் சரிந்தன. 17069 புள்ளிகளில் ஆரம்பித்த வர்த்தகம் கிடுகிடுவென வீழ்ந்து 16743.25 ஆகிவிட்டது. நிப்டியில் 125 புள்ளிகள் சரிந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஓஎன்ஜிஸி ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே இன்று லாபத்தில் கைமாறின.
குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விற்க இயக்குநர் குழு அனுமதித்ததால், பங்குச் சந்தையில் 168.15 லிருந்து 5.86 சதவிகிதம் உயர்ந்து ரூ 178-க்கு பங்குகள் விற்பனையாகின.












Click it and Unblock the Notifications