கூட்டணிக்கு 'காடுவெட்டி' குருவின் பேச்சு தடையாக இருக்காது-ராமதாஸ்

திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க முயன்று வரும் நிலையில், திமுக நடந்து கொள்ளும் முறையால் பாமக நிர்வாகிகள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது.
இந் நிலையில் திமுக முதுகில் குத்தி விட்டதாக பாமக முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு பூம்புகாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சுட்டிக் காட்டியபோது, ''புராணத்தில் குரு என்றால் யார்? (சுக்ராச்சாரியார்) அவர் நல்ல காரியங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார். குருவிற்கு அவ்வளவு தான் விளக்கம்'' என்று பதிலளித்தார்.
இந் நிலையில் கூட்டணி குறி்த்து விவாதிக்க இன்று மீண்டும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் ராமதாஸ்.
சென்னை ஸ்டார் சிட்டி ஹோட்டலில் நடந்த இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிற 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி 21ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து 10ம் ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக-பாமக கூட்டணிக்கு காடுவெட்டி குரு தடையாக இல்லை. மாவீரனான குரு மிக மிக நல்லவர். உண்மையைத்தான் பேசுவார். அவருடைய பேச்சு கூட்டணிக்கு தடையாக இருக்காது.
கூட்டணி குறித்து பாமக குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்து நாங்கள் பேசவில்லை, உட்கட்சி தேர்தல் குறித்துதான் பேசப்பட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications