தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை வெறித் தனமாகதாக்கி விரட்டியுள்ளது இலங்கை கடற்படை. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியிலும்,கொதிப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு வாக்கில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படை வெறியர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளைக் காட்டிமிரட்டியஅவர்கள் மீனவர்களையும் தாக்கினர். இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளை நோக்கி திருப்பி ஓடினர். அப்போதும் விடாமல் இலங்கைக் கடற்படையினர் தனுஷ்கோடி வரை துரத்தி வந்தனர்.
இந்த தாக்குதலின்போது 2 படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படை காடையர்கள் பறித்துக் கொண்டனர்.
இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கியதோடு,தனுஷ்கோடி வரை துரத்தும் அளவுக்கு இலங்கை கடற்படை வெறியர்களுக்கு தைரியம் வந்திருப்பதும், அவர்களைத் தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லாததும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications