போபால் தீர்ப்பால் இந்திய உறவு பாதிக்காது: அமெரிக்கா
வாஷிங்டன்: போபால் வழக்கின் தீர்ப்பால் இந்தியாவுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்:
யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் உதவி கிடைக்கும்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வேறெந்த புது விசாரணையும் நடக்காது என்று நினைக்கிறேன்.
போபால் விஷவாயு கசிவு விபத்தும் அதன் தீர்ப்பும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும்.
இந்திய அணு சக்தி விபத்து தடுப்பு மசோதா போபால் தீர்ப்பால் தடைபடாதென்று நம்புகிறோம். இந்தத் தீர்ப்பால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.


Click it and Unblock the Notifications
