பிரபாகரன் மட்டுமே என் தலைவன்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை, ஈழப் போர் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகஇருப்பதாலும், ராமசாமி தமிழகத்திற்கு வர அனுமதிக்கக் கூடாது என்றும், கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அவரை அனுமதிக்கக்கூடாதுஎன்றும் கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு தமிழக அரசும், இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. இந்த துரோகத்தை மறைக்க முடியாது.
என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.
இந்த மாதம் 23 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன்.
கடந்த ஜனவரி மாதம் டெல்லி பிரவாசி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அந்த அழைப்பை நான் முற்றாக புறக்கணித்தவன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன் என்றார் ராமசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications