சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு -தனி கோர்ட் விசாரணை தொடக்கம்
ஹைதராபாத்: நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன ஊழல் வழக்கு விசாரணை தனி கோர்ட்டில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்ளிட்டோர் செய்தரூ. 10,000 கோடி ஊழல் வெளியானதைத் தொடர்ந்து ராமலிங்க ராஜு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கை இரண்டாக பிரித்துள்ளனர். ராமலிங்க ராஜுவுக்கு மஞ்சள் காமாலை இருப்பதால் அவர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல இன்னொருவரான ராம் மைனாம்பதி அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால் அங்கு வசித்து வருகிறார். இதையடுத்து இந்த இருவர் தொடர்பான வழக்கை தனியாக பிரித்துள்ளனர்.
இதுதவிர முன்னாள் இயக்குநர்கள் 11 பேர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நேற்று பொருளாதார குற்றத் தடுப்பு கோர்ட் முன்பு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. வழக்கை பின்னர் ஜூலை 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நேற்றைய விசாரணையின்போது ராஜு சார்பிலும், மைனாம்பதி சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகினர். உடல்நலக்குறைவு காரணமாக, ராஜு கடந்த செப்டம்பர் மாதம் முதலே கோர்ட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications