Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போபால் விஷவாயு-ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்த அரசு

Subscribe to Oneindia Tamil

Warren Anderson
போபால்: போபால் விஷவாயு கசிவு நடந்தபோது மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டேவிட் ஆண்டர்சனை, தனது அரசு விமானத்தில் அனுப்பி தப்ப வைத்த விவரம் இப்போது வெளியாகி உள்ளது.

அப்போது மத்தியில் பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் ஆட்சியில் இருந்தது.

போ​பால் யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தி​லி​ருந்து விஷ​வாயு கசிந்​த​தால் 20,000க்​கும் மேற்​பட்​டோர் பலி​யா​யி​னர்.​ இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட வாரன் ஆண்​டர்​சன் சில மணி நேரங்​க​ளில் விடு​விக்​கப்​பட்​டார்.​ இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கும் தப்பிவிட்டார்.

அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் 1984ம் ஆண்டில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத்​துறை இயக்​கு​ந​ராக இருந்த ஆர்.எஸ்.​ சோதி,​​ தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:​

1984ம் ஆண்டு டிசம்​பர் 2, 3ம் தேதி​க​ளில் விஷ​வாயு கசிவு சம்​ப​வம் நடந்​தது.​ அதன் பின்​னர் 7ம் தேதி ஆன்​டர்​சன் கைது செய்​யப்​பட்​டார்.​ ஆனால் கைது செய்​யப்​பட்ட சில மணி நேரங்​க​ளில் அவர் விடு​விக்​கப்​பட்​டார்.​ வாரன் ஆன்​டர்​சனை போபாலி​லி​ருந்து டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு அப்போ​தைய முதல்​வர் அர்​ஜுன் சிங் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து எனக்கு உத்​த​ரவு வந்​தது.​

இ​தைத் தொடர்ந்து அவ​ருக்​காக போபால் விமான நிலை​யத்​தில் மத்​திய பிர​தேச முதல்​வ​ரின் அதி​கா​ரப்​பூர்வ அரசு விமா​னம் தயா​ராக வைக்​கப்​பட்​டது.​ அவ​ரு​டன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்​த​னர்.​

இ​தை​ய​டுத்து தயா​ராக இருந்த விமா​னத்​தில் ஆன்​டர்​சன் ஏறி டெல்லி சென்​றார்.​ விமா​னத்​தில் அவ​ரு​டன் வேறு யாரும் செல்​ல​வில்லை.​

கேப்​டன் எஸ்.எச்.​ அலி விமா​னத்தை ஓட்​டிச் சென்​றார்.​ ஆனால் விமா​னத்​தில் யார் இருக்​கி​றார்​கள் என்ற தக​வல் கேப்​டன் அலிக்கே தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ அது மிக மிக ரக​சி​ய​மா​கவே வைக்​கப்​பட்​டி​ருந்​தது என்​று கூறியுள்ளார்.

இது குறித்து விமான கேப்​டன் அலி கூறுகையில்,
விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருக்​கு​மாறு எனக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டது.​ இதை​ய​டுத்து ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கவே விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருந்​தேன்.​ வந்​த​வர் யார் என்​பதை என்​னி​டம் தெரி​விக்​க​வில்லை.​ அதை ரக​சி​ய​மாக வைத்​தி​ருந்​த​னர்.​

1 மணி நேரம் 35 நிமி​டங்கள் பறந்து டெல்​லி​யில் தரையிறங்​கி​னோம்.​ விமா​னத்தி​லி​ருந்து அந்த நபர்
இறங்​கி​ய​தும்,​​ ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்​துச் சென்​றார்.​ விமா​னத்​தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்​பட்​டார் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அலி அளித்த பதில்களும்:

கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?

பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர், எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.

கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்?

பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.

கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்?

பதில்: ஒரே ஒருவர் மட்டுமே... அவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.

கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?

பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்றார்.

மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:

இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.

ஜெயில் சிங்கை சந்தித்த ஆண்டர்சன்:

இந் நிலையில் ஆண்டர்சென் அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்காவுக்கு சென்ற அவர் தலைமறைவாகிவிட்டார்.

உளவுப் பிரிவுகள் 'ஆபரேஷன்'?:

ஆண்டர்சனை தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வருவது, அவரை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பது, நாட்டை விட்டே தப்ப வைப்பது போன்ற செயல்களை மாநில அரசு மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை. இதை மத்திய உளவுப் பிரிவுகள் தான் ஒருங்கிணைத்து செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரை பத்திரமாக தப்ப விட்டதே அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது.

மெளனம் கலைவாரா அர்ஜுன் சிங்?:

ஆன்​டர்​சனை டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு முதல்​வர் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து உத்​த​ர​வி​டப்​பட்​டது தொடர்​பாக அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வரான அர்​ஜுன் சிங் இதுவரை கருத்து தெரி​விக்​க​வில்லை என்​பது
குறிப்​பி​டத்​தக்​கது. அவர் ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.

இதையடுத்து அவர் தனது மெளனத்தைக் கலைக்கவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

இது குறி்த்து மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் செளஹான் கூறுகையில், யூனி​யன் கார்​பைடு ஆலை​யின் முன்னாள் தலை​வர் வாரன் ஆன்​டர்​சனை விடு​தலை செய்​த​தின் பின்​ன​ணி​யில் உள்ள முக்​கி​யப் பிர​மு​கர் யார் என்​பதை நாட்டு மக்​க​ளுக்கு முன்​னாள் முதல்​வர் அர்​ஜுன் சிங்​கி தெரி​விக்க வேண்​டும்.

ஆன்​டர்​சனை விடு​தலை செய்​யத் தூண்​டி​யது யார் என்​பதை அறிய போபால் நகர மக்​க​ளும்,​​ மத்​திய பிர​தேச மக்​க​ளும் காத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இது​கு​றித்து அறிய அவர்​க​ளுக்கு உரிமை உள்​ளது.​ உண்​மையை நீண்ட நாட்​க​ளுக்கு மறைக்க முடி​யாது என்றார்.

மத்திய பிரதேச அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ஆன்டர்சன் விவகாரத்தில் அர்ஜுன் சிங் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. எனவே அர்ஜுன் சிங் தனது மெளனத்தைக் கலைத்துவிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டிலிருந்து ஆன்டர்சன் வெளியேற மத்தியப் பிரதேச அரசு உதவியதா என்பதை அறிய உலகமே ஆவலாக உள்ளது. எனவே இதுதொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அர்ஜுன் சிங் போக்க வேண்டும் என்றார்.

சோனியாவுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு:

இந் நிலையில் அர்ஜூன் சி்ங் திடீரென நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் அர்ஜூன் சிங் ஏதும் பேசிவிடாமல் இருக்க காங்கிரஸ் தலைமை முயல்கிறதோ என்னவோ.

தீர்ப்பு வேதனை அளிக்கிறது-அப்துல் கலாம்:

இந் நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, போபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், போபால் விஷவாயு கசிவு வழக்கு தீர்ப்புக் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது. அதே நேரத்தில், இந்தத் தீர்ப்பு எனக்கு வேதனை அளித்தது. தீர்ப்பைப் பற்றி படித்துப் பார்த்தேன். ஒரு வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை கொடுத்தது.

நமது சட்டமும், நீதித்துறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+