லாலு விரலில் கருணாநிதி பட மோதிரம்!
Subscribe to Oneindia Tamil

நெப்போலியனுடன் டெல்லி விமான நிலையத்துக்கு இவர் சென்றபோது, முன்னாள் ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் அங்கு வந்தார்.
லாலுவுடன் நெப்போலியன் பேசிக் கொண்டிருந்தபோது, உடனிருந்த கௌரிசங்கர் விரலில் இருந்த கருணாநிதி- ஸ்டாலின் படம் பதித்த மோதிரத்தை பார்த்துவிட்டு, அதை நான் போட்டுப் பார்க்கலாமா என்றார்.
போட்டுப் பார்ப்பது என்ன, நீங்களே வைத்துக் கொள்ளலாம் என்று அதை கழற்றித் தந்தார் கௌரிசங்கர்.
இதையடுத்து அதை உற்சாகமாக அணிந்து கொண்ட லாலு, அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார்.
கருணாநிதிஜி ரொம்ப பெரிய தலைவர்.. எங்கள் எல்லோருக்கும் தலைவர் என்று கூறிவி்டடு, மோதிரத்தை கெளரிசங்கரிடம் திருப்பித் தந்தார் லாலு.












Click it and Unblock the Notifications