தமிழகத்தில் கூடுதலாக 12000 பொறியியல் மாணவர் இடங்கள் சேரும்
சென்னை : தமிழகத்தில் மேலும் 50 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அப்படி கிடைத்தால் கூடுதலாக 12,000 மாணவர் இடங்கள் சேரும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 452 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த நிலையில் புதிதாக 50 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தகுதி உடையவர்களைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழு செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிவரை அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்தது.
பரிசீலனையின் போது சில கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்யப்படாதது தெரிய வந்தது. அந்த வசதிகளை சரி செய்து பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் விரைவில் விண்ணப்பிக்குமாறு அந்த கல்லூரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
வருகிற 28-ந்தேதி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்குள் அனைத்து கல்லூரிகளின் விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.
50 கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்தால் கூடுதலாக 12,000 மாணவர் இடங்கள் உருவாக்கப்பட்டு, மொத்த மாணவர் இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications