பெரியார் தி.க. தலைவர் திருவாரூர் தங்கராசு வீடு மீது பாறாங்கல் வீசி தாக்குதல்
சென்னை: பல்வேறு தடைகளை மீறி தந்தை பெரியார் குறித்த நூல் தொகுப்பை உருவாக்கி சமீபத்தில் வெளியிட்ட பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது. பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு கும்பல்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கராசுவின் வீடு உள்ளது. இவரது மகன் புகழேந்தி. இவர் செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஆவார்.
வீட்டிற்கு வந்த அவர் காரை நிறுத்தி விட்டு உள்ளே போனதும் ஒருகும்பல் பாறாங்கல்லைப் போட்டுத் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து தங்கராசு கூறுகையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பெரியார் நூல் தொகுதிகள் வெளியானது. அந்த தொகுதிகள் வெளியாக தடை விதித்திருந்தவர்கள்தான் இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
நான் நூலை வெளியிட்டவன் என்பதால் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்றார். இந்த சம்பவம் குறித்து தங்கராசுவின் வழக்கறிஞரான துரைசாமி கூறுகையில், இது தங்கராசுவையும், அவரது குடும்பத்தினரையும் கொல்ல நடந்த சதியாகும் என்றார்.
பெரியாரின் குடிஅரசு தொகுதிகளை சமீபத்தில் திருவாரூர் தங்கராசு வெளியிட்டார். பெரியார் திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் இதை எதிர்த்து கி.வீரமணி தலைமயிலான திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதை விசாரித்த உயர்நீதிமன்றம், வீரமணியின் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து குடிஅரசுத் தொகுதி நூல்களை பெரியார் திராவிடர் கழகம் பிரஸ் கிளப்பில் வைத்து வெளியிட்டது. கொளத்தூர் மணி தலைமையில் நடந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில்தான் தங்கராசு வீடு மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications