பேட்மிண்டன் சங்கத் தலைவர் தேர்தலில் அசார் திடீர் விலகல்
டெல்லி: இந்திய பூப்பந்தாட்ட அசோஷியேஷன் (பேட்மிண்டன் சங்கம்) தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் திடீரென விலகிக் கொள்ளவே, தற்போதைய தலைவர் வி.கே. வர்மாவே மீண்டும் தலைவராகியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக உள்ள வர்மா தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிவாதியாகிய அசாருதீன் மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆவார். விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் அசாருதீன்.
அதற்கு முன்பு, தனக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்வதற்காக, பேட்மிண்டன் சங்கத்தேர்தலுக்கு தடை கோரி ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்ட கோர்ட்டை அணுகினார்.
ஆனால் கோர்ட் தேர்தலை தடை செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டில், சூதாட்டப் புகாரில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட்ட ஒருவர் எப்படி போட்டியிடலாம் என வி.கே.வர்மா பிரச்சினை கிளப்பினார்.
இதையடுத்தே பின்வாங்கிய அசாருதீன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தத் தேர்தலுக்கான பார்வையாளராக தீபிகா கச்சல் என்பவரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்திருந்தது.
அடுத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications