ஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: ஜூலை 5ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 454 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 25 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்களை சேர்க்கவே இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
கவுன்சிலிங் தொடங்குவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
மாணவர்கள் கவுன்சிலிங்கின்போது கல்லூரியை, பிரிவை தேர்ந்து எடுக்கும் போது இருமாணவர் ஒரே கட் ஆப் எடுத்திருந்தால் முதலில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை முடிவு செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒரு நம்பர் கொடுக்கப்படும். இது ரேண்டம் நம்பர் ஆகும். இந்த ரேண்டம் நம்பர் வருகிற 15-ந் தேதி கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் கட் ஆப் மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ரேங்க் பட்டியல் 20-ந் தேதிக்குள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் 18-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
21 மற்றும் 22-ந் தேதிகளில் விளையாட்டு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 28-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி எடுத்து படித்த மாணவர்களுக்கு 29, 30 மற்றும் ஜுலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
ஜுலை 5-ந் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் ஒரு மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications