பி.எப்., பென்சன், எல்.ஐ.சிக்கு வரி இல்லை!: மத்திய அரசு முடிவு
டெல்லி: இனி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்கள், பிபிஎப், ஜிபிஎப், எல்ஐசி போன்றவற்றுக்கு நேரடி வரி விதிப்பதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மசோதா வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு தனது வரி வருமானத்தை பெருக்கும் நோக்கில் சிலவற்றுக்கு நேரடி வரி விதிக்க முடிவு செய்தது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு நிறுவன நிதி, பென்சன் பணம், வீட்டு கடன் ஆகியவற்றிற்குத் தான் நேரடி வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இந்த வரி விதிப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால் இப்போது இம் முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இதை போன்று நீண்ட காலம் வருமானம் தரும் சொத்துக்களுக்கு அதன் வருமானத்துக்கு ஏற்ப ஆண்டிற்கு ஒருமுறை வரி விதிக்கும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சேமிப்புகள், தனிநபர் வருமானம், ஓய்வு கால பயன்கள், பென்சன் தொடர்பான வருமானம் ஆகியவைகளுக்கு விதிக்கப்படும் நேரடி வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் வீட்டுக் கடன்தாரர்கள், ஓய்வு பெறுவோர், பென்சன்தாரர்கள், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணம் செலுத்துவோர், வருங்கால வைப்புநிதி செலுத்துவோர் பயன் அடைவார்கள்.
மற்ற நேரடி வரி விதிப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் வருமான வரி விதிப்புகளில் சிற்சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
ஆண்டு வருமானத்தில் ஆண்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை. பெண்களுக்கு ரூ.1.9 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை. ரூ.1.6 லட்சம் முதல், ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை 20 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.25 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 50 ஆண்டு பழமையான வரி விதிப்பு முறைகளை மாற்றி புதிய வரி விதிப்பு முறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய வரி விதிப்பு முறைகள் பாராளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications