சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு-பல லட்சம் பொருட்களுக்கு சேதம்

இந்த வெள்ளத்தில் வெளிநாட்டு பொருட்கள் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் வழக்கமாக சிங்கப்பூரில் பெய்யும் மழையின் அளவில் 60 சதவீத அளவு, அதாவது 101 மில்லிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வந்த வினை இது. இந்த பெரு மழையால் சிங்கப்பூரின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆர்ச்சர்ட் சாலை வணிக வளாகங்கள்தான்.
இந்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல விலை உயர்ந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக சிறு வியாபாரிகள் குமுறியுள்ளனர். தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வசதிகள் சரியில்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் துணி விற்பனையகமான மாஸிமோ துத்தி, ஹெர்ம்ஸ் பொத்திக் ஆகியவையே.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.
சேத மதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவில்லை. வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் அதை மதிப்பிட முடியும் என சிங்கப்பூர் சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆர்ச்சர்ட் வர்த்தக சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.
கன மழையில் சிக்கி பல்வேறு வணிக வளாகங்களுக்குக் கீழ் உள்ள கார் பார்க்கிங்குகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும் கூட சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications