ஐபோன் 4... முதல் நாளில் மட்டும் 6,00,000 ஆர்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

Apple Iphone 4G
நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய தயாரிப்பான ஐபோன் 4-க்கு முதல் நாளில் மட்டுமே 600000 ஆர்டர்கள் குவிந்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே அதன் தயாரிப்புக்கு இவ்வளவு ஆர்டர்கள் குவிந்திருப்பது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு ஆப்பிள் 3 ஜி மொபைல் அறிவிக்கப்பட்டபோது வந்ததை விட 10 மடங்கு அதிகமான ஆர்டர்கள் இப்போது கிடைத்துள்ளதாக ஆப்பிளின் அமெரிக்க பகுதி உரிமையாளர்களான ஏடி அண்ட் டி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, ஆப்பிள் 4 செல்போன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தினமான ஜூன் 15-ல் மட்டும் எடி அண்ட் டியின் இணையதளத்தை 13 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

ஜூன் 24ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் ஐபோன் 4 விற்பனைக்கு வருகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட80 நாடுகளில் வரும் செப்டம்பரில் வெளியாகிறது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் அதற்குப் பிறகுதான் விற்பனைக்கு வரும் இந்த போன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+