3.5 பில்லியன் டாலர் நிதி திரட்டும் சிட்டி குழுமம்!
Subscribe to Oneindia Tamil

இதில் சிட்டி குழுமத்தின் ஒரு அங்கமான சிட்டி கேப்பிடல் அட்வைஸர்ஸ் மட்டும் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை எதிர்பார்க்கிறது. முதலீட்டு நிதியாக 750 மில்லியன் டாலர் கேட்கிறது. இந்த நிறுவனம் ஒரு மாற்று சொத்து நிர்வாக அமைப்பாகவும், பெரும் முதலீட்டு நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.
இது தவிர மேலும் 1 பில்லியன் டாலருக்கு முதலீட்டு நிதியைத் திரட்டுகிறது சிட்டி குழுமம்.
இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி கூறுகையில், "சிட்டி குழுமத்தை நம்பியுள்ள வாடிக்கையாளர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, சில நிதித்துறை சீர்திருத்தங்களை சிட்டி மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் காப்பதில் அதிக அக்கறை கொண்டிருப்பதாலேயே இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
