ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல்: வருகிறது நிபுணர்கள் குழு
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஆராய அடுத்த வாரம் நிபுணர்கள் குழு வரவுள்ளது.
சமீபத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரமும் கட்டப்பட்டது.
முதலில் 22 அடி கட்டப்பட்ட இதன் உயரத்தை 236 அடியாக உயர்த்த 1980ம் ஆண்டில் பணிகள் தொடங்கின. 1987ம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்து ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆனால், கடந்த 1992ம் ஆண்டு ராஜகோபுரத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இந் நிலையில் இப்போது கோபுர விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கோபுர விரிசல் குறித்து ஆராய அடுத்த வாரம் நிபுணர் குழு ஸ்ரீரங்கம் வரவுள்ளது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் ஆய்வுத் துறை பேராசிரியர்கள், தொல்லியல் துறை பிரதிநிதி உள்பட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் விரிசலை ஆய்வு செய்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மிக அருகில் உள்ள கடைகள், கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications