திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில் : செம்மொழி மாநாட்டை ஓட்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. கடந்த வாரம் விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில் தண்டவாளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் எஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளில் தீவிர சோதனையும் நடந்து வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ் உரிமையாளர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தற்போது துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடமும் சோதனை நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாடு முடியும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று எஸ்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications