4ஜி தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன-ராஜா
ஊட்டி: 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், நான்காம் தலைமுறை 4ஜி தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தை விட பல மடங்கு லாபத்தை 3ஜி லாபத்தில் மத்திய அரசு கண்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த அந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில் அடுத்த மேம்பட்ட தொழில்நுட்பமான 4ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 4ஜி தொடர்பான கருத்துக்களை வழங்குமாறு தொழி்ல் நிறுவனங்கள், பங்குதாரர்களை சில வாரங்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டுள்ளது ட்ராய்.
இதுதொடர்பான கருத்துக்கள் பெறப்பட்ட பின்னர், ட்ராய் பரிந்துரையின் அடிப்படையில் 4ஜி தொடர்பான பணிகள் முழுமையாக தொடங்கும்.
உலக செம்மொழி மாநாட்டுக்காக கோவையில், மாநாடு நடைபெறும் இடத்தில் தொலைபேசி சேவை மற்றும் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 130 டவர்களையும், 20 மொபைல் வேன்களையும் நிறுவியுள்ளோம் என்றார்.
4வது தலைமுறை தொலைபேசி தொழில்நுட்பமான 4ஜிக்கு அல்ட்ரா பிராட்பேண்ட் என்றும் இன்னொரு பெயர் உண்டு. இதில் அதி விரைவாக டவுன்லோட் செய்ய முடியும். மேலும் உயர் தரத்தில், படு துல்லியமாக வீடியோ படங்களையும் இகாண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications