ஓகனேக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு-சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் நாளை பந்த் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் நாளை பந்த் நடத்த வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் இன்று மாலைக்கு மேல் கர்நாடகம் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பன்னாரி எல்லைப் பகுதியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் வழியாக செல்லும் வாகனங்களும் நிலைமையைப் பொறுத்து அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications