சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி
துபாய்: சவூதி அரேபியாவின் அல்கோபர் பகுதியில் விஷ வாயு தாக்கி 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
அவர்களது பெயர்கள் சமீஷ், சுனில் எனத் தெரிய வந்துள்ளது. இருவரும் அல் தமிமி சூப்பர்மார்க்கெட்டில் உள்ள கழிவறைத் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கழிவறைத் தொட்டிக்குச் செல்லும் குழாயை சுத்தப்படுத்தும் பணியில், தொட்டிக்குள்ளிருந்தபடி இருவரும் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களிடமிருந்து நீண்ட நேரமாக சத்தம் ஏதும் வராததால் மேலே இருந்த ஊழியர்கள் பதட்டமடைந்து அவர்களைக் கூப்பிட்டுப் பார்த்தனர்.
இதையடுத்து இரு இந்தியர்களையும் மீட்பதற்காக எகிப்து நாட்டைச் சேர்ந்த பதே என்பர் உள்ளே போனார்.அப்போது அவரும் மயங்கி விழுந்தார். இதையடுத்து மீட்புப் படையினர்விரைந்து வந்த மூன்று பேரையும் மேலே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்கோபர் பகுதியில் இதுபோன்ற மரணம் ஏற்படுவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications