தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தக்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந் நிலையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இணைந்து ஒரு மனு கொடுத்துள்ளனர்.
இவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த மனுவை அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்கினர்.
அந்த மனுவில், பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தாய்மொழியில் வழக்காட அனுமதி உள்ளது. ஆனால் தமிழில் மட்டும் தாய்மொழியில் வழக்காட அனுமதி இல்லை.
கோவையில் நீங்கள் துவக்கி வைக்கவுள்ள செம்மொழி மாநாடு ஆரம்பமாவதற்குள் தமிழில் வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வட சென்னை- தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இதில் பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை திமுக அரசு கைது செய்துள்ளது. வக்கீல்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் குரல் கொடுப்பவர் புரட்சித் தலைவி மட்டுமே என்றார்.
சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழை வழக்காடு மொழியாக்க எம்.ஜி.ஆர். போராடினார். ஆனால், தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கு கருணாநிதி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழை வழக்காடு மொழியாக்க முடியும். எனவே அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்றார்.
சேலத்தில் ஜனாபதி, மொய்லி உருவ பொம்மை எரிப்பு:
இதற்கிடையே சேலத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரின் உருவப் பொம்மையை எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்கக் கோரி சேலத்தல், தமிழ் மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த உருவப் பொம்மைகளை எரித்தனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் பூ மொழி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications