முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மறக்கக் கூடாது-தற்கொலை செய்த மாணவரின் பரபரப்புக் கடிதம்
சென்னை: சென்னை நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலைசெய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது...
உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும்.
மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.
தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.
நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications