ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை: இரட்டைக் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புளியங்குடி கீழபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர் பாண்டியன் என்பவரின் மகன்கள் சிவகுமார், மனோகர். இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தங்கள் தந்தை இறந்ததை அடுத்து தாத்தா பக்கிரிசாமி ஆதரவில் இருந்தனர்.
கீழபுதூர் சர்க்கரை கிணறு பகுதியில் பக்கிரிசாமிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே கிழபுதூர் வடக்கு தெருவை சேர்ந்த முருகராஜூக்கும் நிலம் உள்ளது.
இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பக்கிரிசாமி, சிவக்குமார், மனோகர் ஆகியோர் கீழப்புதூரில் நடந்து வந்தபோது முருகராஜ், அவரது மனைவி தாயம்மாள் நாச்சியார், மகன் சரவணன் ஆகியோர் வழிமறித்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில் முருகராஜ் குடும்பத்தினர் மூன்று பேரும் சிவக்குமாரையும், மனோகரனையும் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். திருமணமான ஒரு வாரத்தில் மனோகரன் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசில் பக்கிரிசாமி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், முருகராஜ், தாயம்மாள் நாச்சியார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பொன் பிரகாஷ், சரவணன் உள்ளிட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications