பெட்ரோல் வரி: மாநில அரசுகள் குறைக்க வேண்டும்-தியோரா

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
"பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. சில மாநிலங்களில் பெட்ரோல் மீது 3 சதவீத வாட் வரியும், டீசல் மீது 24.7 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் விலை உயருகிறது. எனவே, விற்பனை வரி மற்றும் வாட் போன்ற வரிகளைக் குறைத்தால், பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது.
சில மாநிலங்களில் ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணைக்கும் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியால், ஏழைகள் கூடுதலான தொகை கொடுத்து மண்எண்ணை வாங்க வேண்டி இருக்கிறது. எனவே மண்எண்ணை மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
சர்வதேச கச்சா விலை உயர்வு காரணமாக, பெட்ரோலியம் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. என்றாலும், விலை உயர்வு இந்திய மக்களை பாதிக்க கூடாது என்பதற்காக, எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் மானியம் அளித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.26 ஆயிரம் கோடி மானியம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரேஷன் மண்எண்ணையை குறைந்த விலையில் எண்ணை நிறுவனங்கள் வழங்குவதற்கு ரூ.14 ஆயிரத்து 430 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல்-டீசல் மீது மத்திய அரசு ஒருங்கிணைந்த விற்பனை வரி விதிக்கிறது. இதனால் வரி குறைகிறது. இதுபோன்ற முறையை மாநில அரசுகள் விரைவாகப் பின்பற்ற வேண்டும்.
இதன் மூலம் ஏழை மக்களுக்கு பெட்ரோல், டீசல், மண்எண்ணை குறைவான விலையில் கிடைக்கும். மத்திய பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம், மாநில அரசுகளும் வரியை உயர்த்தும் போக்கையும் கைவிட வேண்டும்."
இவ்வாறு முரளி தியோரா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையே பெட்ரால், டீசல் விலையை உயர்த்துவது குறித்து அடுத்த வாரம் திங்கள்கிழமை மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications