ஜி-20 மாநாடு: பிரதமர் கனடா பயணம்-அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: வரும் 26ம் தேதி கனடாவில் தொடங்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை மறுநாள் கனடா செல்கிறார்.
ஜி-20 மாநாடு வரும் 26, 27 தேதிகளில் கனடாவில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ உள்ளிட்ட உலக தலைவர்கள் பஙகேற்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வியட்நாம், ஸ்பெயின், எத்தியோப்பியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஐ.நா. பொது செயலாளர், உலக வங்கி தலைவர், சர்வதேச தொழிலாளர் அமைப்பு தலைவர் ஆகியோரும் பஙகேற்கின்றனர்.
மாநாட்டில் பஙகேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை மறுநாள் கனடா செல்கிறார். அங்கு அதிபர்கள் ஒபாமா, ஹூ ஜிந்தாவோ ஆகியோருடன் தனியாகவும் பேச்சு நடத்துகிறார்.
மாநாட்டின் போது இந்தியா-கனடா இடையிலான அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. இது தவிற மற்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு நாடுகளின் விவகார செயலாளர் விவேக் கட்ஜூ ஆகியோர் கூறுகையில்:
பிரதமரின் இந்த பயணத்தின் போது இந்தியா-கனடா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அணிசக்தி தயாரிக்க தேவைப்படும் அணு மூலப் பொருட்களை கனடாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும்.
இது தவிர கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், உயர் கல்வி, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
இந்த மாநாட்டில் இதற்கு முன் வாஷிங்டன், லண்டன் மற்றும் பீட்ஸ்பெர்க் ஆகிய நகரங்களில் நடந்த ஜி-20 மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் தலைவரகள் எதிர்கால திட்டங்களை முடிவு செய்வார்கள்.
இந்த மாநாட்டில் பொருளாதார சரிவு, கடன் வழங்கும் ஒழுங்கு முறைகளில் சீர் திருத்தம், சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர் திருத்தம் ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் சியோல் நகரில் நடைபெறவிருக்கும் அடுத்த ஜி-20 மாநாடு பற்றியும் விவாதிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications