நக்சல் பாதித்த பகுதிகளுக்கு ரூ 3400 கோடி வளர்ச்சி நிதி!
டெல்லி: மத்திய மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களில் நக்சல் பாதித்த பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ 3400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளன. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸ் மற்றும் மாநில போலீசார் கொண்ட கூட்டுப்படைக் குழு ஈடுபட்டுள்ளது.
அடுத்தக் கட்டமாக மாவோயிஸ்டுகளை ஒழிக்க ராணுவத்தின் மேலும் சில பிரிவுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய விமானப்படையின் 15 ஹெலிகாப்டர்கள் மாவோயிஸ்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இது தவிர மாவோயிஸ்டுகளை அழிக்க ராணுவ அதிகாரிகளையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்கும் ராணுவ அதிகாரிகள் பயன் படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனதை மாற்றுவதற்காக மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி உள்ளது. இதற்கு மட்டும் மொத்தம் ரூ. 3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் எந்தெந்த மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்பது அடுத்த வாரம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications