ஈழப் போரின்போது நடந்த தமிழினப் படுகொலைகள்-போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவு

போர்க் குற்ற விசாரணைக்கான குழுவை அமைத்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் - முன்னாள் இந்தோனேசிய அரசு வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மேன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்.
கடந்த வாரம் ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளர் லின் பாஸ்கோ இலங்கைக்குச் சென்றார். அப்போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். பின்னர் போர்நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக் குழுவை ஐ.நா. அமைத்துள்ளது.
ஈழத்தில் போர் உச்சத்தில்இருந்த காலகட்டத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை. இதுகுறித்து அப்போதே உலக நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் அதை ஐ.நா. பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.
போர் முடிந்த பிறகும் கூட ஐ.நா. ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதை யாரும் கண்டுகொள்ளாமலேயே இருந்தனர்.
மேலும், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தபோதிலும் அதை ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக ஈழப் போரின் போது நடந்த ராணுவ அத்துமீறல்கள், படுகொலைகள் தொடர்பான வீடியோ படங்கள், புகைப்படங்கள் வெளியாக ஆரம்பித்த நிலையில் இலங்கை மீதான ஐ.நா.வின் நிலைக்கு ஆட்சேனையும், எதிர்ப்பும் வலுத்து வந்தது.
இந்த நிலையில்தான் போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைக் குழு குறித்து இலங்கை சென்றிருந்த பாஸ்கோ கூறுகையில், ஈழப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். இறுதிக்கட்டத்தின்போது நடந்த ராணுவ அத்துமீறல்கள் குறித்து முக்கியமாக விசாரிக்கப்படும் என்றார்.
ஐ.நா. கணக்குப்படி கடைசி கட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டதாக இருக்கும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை அதிர்ச்சி - கோபம்
ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மீடியா அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், இது தேவையில்லாதது, ஏற்றுக் கொள்ளமுடியாதது. இலங்கை போன்ற சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு இதை ஏற்றுக் கொள்ளாது என்றார்.
உலக நாடுகளிலிருந்து அதிகரித்து வந்த நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த மாதம் ஒரு கண் துடைப்பு விசாரணைக் கமிஷனை இலங்கை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக் குழு சுதந்திரமான முறையிலும், நியாயமான முறையிலும் விசாரணை நடத்தினால், விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டால் புதைந்து போன பல உண்மைகள் வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications