தமிழ்க் கலாச்சாரம், வரலாறு குறித்த நூலைப் படைக்க கருணாநிதிக்கு சிவத்தம்பி கோரிக்கை
கோவை: உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில், நூல் ஒன்றை கொண்டு வர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி கோரிக்கை விடுத்தார்.
கோவையில் தொடங்கியுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
உலகம் முழுவதும் பரவியிருக்கிறது தமிழ். இது உலக மொழியாக,செம்மொழியாக பரவியிருக்கிறது. இந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதியை நான் கேட்டுக் கொள்கிறேன், வெளியில் வாழும் தமிழர்கள், தமிழ் மீது பற்று கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும், போதிக்கும் நூல் ஒன்றைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, அவசியமானது.
தமிழை மேம்படுத்த நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும். உதாரணத்திற்கு டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை. அதை நாம் உருவாக்க வேண்டும்.
சங்கத் தமிழ் இலக்கியம் சமயச் சார்பற்ற இலக்கியம். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று போதித்தவர்கள் தமிழர்கள். வணக்கம் என்றார் சிவத்தம்பி.












Click it and Unblock the Notifications