ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமரான ஜூலியா

Subscribe to Oneindia Tamil

Julia Gillard
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கில்லர்ட் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் கெவின் ருட் பிரதமராக இருந்து வந்தார்.

ஆனால், சமீப காலமாக நாடு முழுவதும் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதையடுத்து அதை சரிகட்ட பிரதமரை மாற்ற கட்சி முடிவு செய்தது.

இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்ய எம்பிக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தற்போதைய துணை பிரதமர் ஜூலியா கில்லர்ட் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கெவின் கண்ணீர் மல்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலியா இன்று பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

பிரதமர் பதவி ஏற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், இது மிகப் பெரிய கெளரவம். நாட்டை வழிநடத்தி செல்லும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த தேர்தலில் கட்சியை சிறப்பான வெற்றிக்கு இட்டுச் செல்லும் வகையில் செயல்படுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+