மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை: கிரிகரி ஜேம்ஸ்
கோவை: மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. குறுந்தகவல் யுகத்தில் அது மூழ்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்றார் மொழி அறிஞர் கிரிகரி ஜேம்ஸ்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று தொல்காப்பிய அரங்கத்தில் நடந்தஆய்வரங்கத்தில் பேராசிரியர் க.அனபழகன், முனைவர் க.சிவத்தம்பி, முனைவர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் அஸ்கோ பர்ப்போலா, முனைவர் வில்.ஸ்வீர்மேன், முனைவர் கிறிஸ்டினா முரு, முனைவர் ஆ.கந்தையா டத்தோ, முனைவர் த.மாரிமுத்து, முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் நா.திருமலைச்செட்டி, முனைவர் அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கி, முனைவர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் மு.அனந்தகிருட்டினர்ன், முனைவர் கிரிகோரி ஜேம்ஸ், முனைவர் உல்ரிக் நிக்லாஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பிரிட்டனில் பிறந்து ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை பேராசிரியராக இருக்கும் கிரிகரி ஜேம்ஸ் தமிழில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு மரியாதை செலுத்தும் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே இது அமைந்து விடாமல் அந்த அறுதியான பிரகடனத்தின் சாரத்தை மூலதனமாக்கும் அந்தப் பிரகடனம் ஊக்குவிக்க வேண்டிய புலமைப் பரம்பரைச் செல்வத்தை சாத்தியமாக்கும் உந்து சக்தியாக இந்த மாநாடு அமையட்டும்.
மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. ஒரு தலைமுறை பின்வரும் தலைமுறைக்கு பண்பாட்டை எடுத்துச் செல்லும் சாலை. ஒரு விதத்தில் மொழி அந்தப் பண்பாட்டின் வடிவமும் கூட.
இன்று உலகெங்கும் விரையும் குறுந்தகவலின் சராசரித்தன்மைக்குள் தமிழ் மூழ்கி விடாமல் இருக்க வேண்டுமானால் மிக உயர்தரமான மொழிப் புலமையை இங்கேயும் உலகின் மற்ற நாடுகளிலும் ஊக்குவிக்க முன்னெடுத்துச் செல்ல புதிய துணிச்சலான சவால்கள் நிரம்பிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச அளவில் தமிழ் ஆராய்ச்சிக்காக உதவி நிதியை உருவாக்க வேண்டும்.
பண்டைய கிரேக்கர்கள் காலம் என்பதை குறிக்க க்ரோனோஸ், கைரோஸ் என்ற இரண்டு சொற்களைப் பயன்படுத்தினர். இதில் க்ரோமோஸ் என்பது நிமிடம்.
மாதம், ஆண்டு போன்றவை அளவை ரீதியான காலத்தைக் குறிக்கிறது. கைரோஸ் என்ற சொல் சிக்கெனப்பற்றிக் கொள்ள வேண்டிய, பயந்தரக்கூடிய, சடுதியில் மறைந்து விடும் வாய்ப்பு, ஒன்றின் போக்கை மாற்றவல்ல தருணம்... போன்ற தன்மைரீதியான காலத்தை குறிக்கிறது.
ஓர் ஆயிரம் ஆண்டு காலத்தில், இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் ஒரு வாரம் என்பது எம்மாத்திரம். இமைக்கும் நேரம் கூட இல்லை. கைரோஸ் அளவுதான். ஆனால் ஆய்வு வளர வளர தமிழ் குறித்த நம் அறிவில் ஆழமும் அகலமும் கூடக் கூட, இந்த ஒரு வாரத்தை மக்கள் நினைவு கூர்வார்கள்..." என்றார்.
வெளிநாட்டு அறிஞர், தமிழை சற்றே தடுமாற்றத்துடன் உச்சரித்தாலும், தமிழன் சிறப்பு ழ, ளவை அவர் மிகச் சரியாக அவர் உச்சரித்த விதம் வியப்படைய வைத்தது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications