பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை புறக்கணித்த மகன் கைது
சென்னை: வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவே ஆகும்.
சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.
இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.
இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.
இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.
ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.
ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications