கைதிகளை விடுவிப்பது கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்-ஜெ

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொடநாட்டில் உள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுட் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதை மீறி ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்.
இது கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.
கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்; காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனை; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தமிழில் பேசுகின்ற உரிமை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி ஆக்குவது என எந்த உரிமைகளையும் பெற்றுத்தர முடியவில்லை. தமிழ் நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கின்றன.
தமிழக மக்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமை வாக்குரிமை.
அதையும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் கைதிகள் மூலம் பறிக்க நினைக்கும் ஜனநாயக விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஆயுட் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications