உள்நாடு ரூ.100; வெளிநாடு ரூ.500... ஜூலை 1 முதல் விமான டிக்கெட்டுகளுக்கு சேவை வரி!

உள்நாட்டு பயணத்துக்கு 100 ரூபாயும், வெளிநாட்டு பயணத்துக்கு 500 ரூபாயும் சேவை வரியாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறி்வித்துள்ளது.
விமான சேவையின் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி கூடுதல் நிதி திரட்டுவதற்காக, விமான டிக்கெட்டுகள் மீது 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2010-2011-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்துக்கான விமான டிக்கெட்டுகள் மீது வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட உள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை மத்திய வருவாய்த்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, உள்நாட்டு விமான பயணத்துக்கு அது எந்த வகுப்புக்கான டிக்கெட்டாக இருந்தாலும் அதன் மீது 10 சதவீதம் சேவை வரி அல்லது ரூ.100 இவற்றில் எது குறைவோ அந்த தொகை சேவை வரியாக வசூலிக்கப்படும்.
வெளிநாட்டுக்கு விமானத்தில் சாதாரண வகுப்பில் சென்றால் டிக்கெட் கட்டணத்தின் மீது 10 சதவீதம் சேவை வரி அல்லது ரூ.500 இவற்றில் எது அதிகமோ அந்த தொகை சேவை வரியாக பயணியிடம் இருந்து வசூலிக்கப்படும்.
வெளிநாட்டுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் தொகை மீது ஏற்கனவே 12 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுவதால் புதிதாக வரி ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
இதேபோல், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்பு திட்டம், ராஜீவ் அவாஜ் யோஜனா திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கடற்படை, கடலோர காவல்படை, சுங்க இலாகா ஆகியவற்றின் படகுகள் மற்றும் கப்பல்கள் பழுதுபார்ப்பு பணி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர், மின்சார சப்ளை, மருத்துவ சேவை, மாசு கட்டுப்பாட்டு சேவை ஆகியவற்றுக்கும் சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய பள்ளிக்கூட விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் போன்றவை நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுராவுக்கு விமானத்தில் சென்று வருபவர்களுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
passengers, flight tickets, union revenue department, tax exemption
ஜூலை 1 முதல் விமான டிக்கெட்டுகளுக்கு சேவை வரி!
உள்நாடு ரூ.100; வெளிநாடு ரூ.500... ஜூலை 1 முதல் விமான டிக்கெட்டுகளுக்கு சேவை வரி!
டெல்லி: ஜுலை 1-ந் தேதி முதல் விமான டிக்கெட்டுகளுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது.
உள்நாட்டு பயணத்துக்கு 100 ரூபாயும், வெளிநாட்டு பயணத்துக்கு 500 ரூபாயும் சேவை வரியாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறி்வித்துள்ளது.
விமான சேவையின் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி கூடுதல் நிதி திரட்டுவதற்காக, விமான டிக்கெட்டுகள் மீது 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2010-2011-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்துக்கான விமான டிக்கெட்டுகள் மீது வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட உள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை மத்திய வருவாய்த்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, உள்நாட்டு விமான பயணத்துக்கு அது எந்த வகுப்புக்கான டிக்கெட்டாக இருந்தாலும் அதன் மீது 10 சதவீதம் சேவை வரி அல்லது ரூ.100 இவற்றில் எது குறைவோ அந்த தொகை சேவை வரியாக வசூலிக்கப்படும்.
வெளிநாட்டுக்கு விமானத்தில் சாதாரண வகுப்பில் சென்றால் டிக்கெட் கட்டணத்தின் மீது 10 சதவீதம் சேவை வரி அல்லது ரூ.500 இவற்றில் எது அதிகமோ அந்த தொகை சேவை வரியாக பயணியிடம் இருந்து வசூலிக்கப்படும்.
வெளிநாட்டுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் தொகை மீது ஏற்கனவே 12 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுவதால் புதிதாக வரி ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
இதேபோல், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்பு திட்டம், ராஜீவ் அவாஜ் யோஜனா திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கடற்படை, கடலோர காவல்படை, சுங்க இலாகா ஆகியவற்றின் படகுகள் மற்றும் கப்பல்கள் பழுதுபார்ப்பு பணி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர், மின்சார சப்ளை, மருத்துவ சேவை, மாசு கட்டுப்பாட்டு சேவை ஆகியவற்றுக்கும் சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய பள்ளிக்கூட விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் போன்றவை நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுராவுக்கு விமானத்தில் சென்று வருபவர்களுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!

Click it and Unblock the Notifications