காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த மாடல் அழகி விவேகா பாபாஜி மர்ம மரணம்

மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பில் இவர் தங்கியிருந்தார். அங்கு அவரது இறந்த உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். விவேகாவுக்கு வயது 37.
இவர் மிஸ் மொரீஷியஸ் பட்டம் வென்றவர் ஆவார். இவரது மரணம் குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், விவேகா பாபாஜி, தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் வசிப்போர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது கதவு திறக்கவில்லை. அப்போது விவேகா வீட்டுக்குள்ளிருந்து காஸ் வாசம் வந்துள்ளது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது மின்விசிறியில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார் விவேகா.
இது தற்கொலை போல தோன்றுகிறது. இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்.
சமீபத்தில் அவருடைய காதலர் அவரை விட்டுப் பிரிந்து சென்றார். இதனால் மனம் உடைந்தநிலையில் விவேகமா இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். விவேகா தனது மரணத்திற்கு முன்பு கடிதம் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காமசூத்ரா ஆணுறை விளம்பரங்கள் பலவற்றில் நடித்துள்ளார் விவேகா. மேலும் லிவ் இன் ஜீன்ஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இரண்டு இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
90களில் மொரீஷியஸிலிருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்து வந்தார் விவேகா. மாடல் தொழிலில் ஈடுபடுவதற்காக வந்தவர் பின்னர் அதில் புகழ் பெறத் தொடங்கியதும், திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications