நாகர்கோவிலில் என்ஜீனியர் மனைவியிடம் 90 பவுன் நகை திருட்டு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ஓடும் ரயிலில் என்ஜீனியர் மனைவியிடம் 90 பவுன் நகை திருட்டு போனது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் சேவியர் ராஜ். சிவில் என்ஜீனியர். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிஷா. இவர் உறவினர்களுடன் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் கணவருடன் பிரதிஷா செங்கல்பட்டு சென்றார். பின்னர் சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் உறவினர்களும் இருந்தனர். நேற்று காலை ரயில் நாகர்கோவில் வந்தது.

அதில் இருந்த பிரதிஷா மற்றும் உறவினர்கள் இறங்கி வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் பிரதிஷா திருமண நிகழ்ச்சியில் அணிவதற்காக எடுத்து சென்ற நகைகள் வைத்திருந்த சுட்கேசை திருந்தார். அப்போது அதில் நகை பெட்டிகள் இருந்தன. திறந்தபோது நகைகளை காணவில்லை.

மொத்தம் 90 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசில் பிரதிஷா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+