குஜராத்தில் 7வது எண்ணைக் கிணறை கண்டுபிடித்தது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் பகுதியில் 7வது எண்ணைக் கிணறைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த கிணறுக்கு சிபி10ஏ-என்1 என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்குக் கீழே 1388 மற்றும் 1403 மீட்டர் கீழே இந்த கிணறு உள்ளது. அகமதாபாத் அருகே இந்த எண்ணைக் கிணறை ரிலையன்ஸ், நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கிணறில் ஒரு நாளைக்கு 410 பேரல் எண்ணை கிடைப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இதுவரை 17 எண்ணைக் கிணறுகளை ரிலையன்ஸ், கண்டுபிடித்துள்ளது. இதில் 6ல் மட்டுமே எண்ணை உள்ளது. தற்போதைய கண்டுபிடிப்புக்கு திருபாய்-50 என ரிலையன்ஸ், நிறுவனம் பெயரிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications