வெப்பச் சலத்தானல் தமிழகத்தில் மழை-தொடரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெப்பச் சலனத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. பலத்த இடியும், மின்னலும் கூடவே இருந்தது.
கடந்த சில நாட்களாகவே மாலையிலும், இரவிலுமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.இன்று காலையும் சில இடங்ளில் பலத்த இடியுடன் மழை பெய்தது.
இந்த மழை இரவு நேரங்களில் நீடிக்கும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications