மறைந்த காங். தலைவர் சுதர்சனம் உடல் தகனம்-கருணாநிதி அஞ்சலி
சென்னை மறைந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனத்தின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதல்வர் கருணாநிதி சுதர்சனம் வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கோவையில் மாரடைப்பால் மரணமடைந்த சுதர்சனத்தின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, ஷெனாய் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பொதுமக்கள், காங்கிரஸ் பிரமுகர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று சென்னைதிரும்பிய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் வைத்திலிங்கம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சுதர்சனம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், சுதர்சனம் கட்சியை தாண்டி எனக்கு நெருங்கிய நண்பர். என்னுடைய பல குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவரது மறைவு எனக்கு நீங்காத துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்றார்.
அதன் பின்னர் மாலையில்இறுதி ஊர்வலம் தொடங்கியது. அமைந்தரை மயானத்தில் நடைபெற்ற உடல் தகன நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். அவரது உடலுக்கு கடைசி மகன் அரவிந்தநாத் தீமூட்டினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications