காஷ்மீரில் பெரும் கலவரம்-ஊரடங்கு அமல்-செல்போன் சேவை துண்டிப்பு

ஜூன் 25ம் தேதி சோபூரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்னர். இதையடுத்து ஹுரியத் மாநாடு கட்சி வன்முறையில் குதித்துள்ளது. நேற்று அந்த அமைப்பினர் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். இதை போலீஸார் தடுக்கவே ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்கு முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதிகளிலும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் செய்வோரை ஒடுக்க போலீஸார் கூடுதலா குவிக்கப்பட்டு வருகின்றனர். துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நிலைமை மோசமாகி வருவதால் ராணுவத்தின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. இதையடுத்து எந்த நேரத்திலும் அங்கு ராணுவம் விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வதந்திகள் பரப்புவோரை ஒடுக்க செல்போன் சேவை மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை ஆகியவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
11ம் தேதி ப.சிதம்பரம் காஷ்மீர் பயணம்:
இந் நிலையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 11ம் தேதி ஸ்ரீநகர் செல்கிறார்.
மாநில அரசு, ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications