பெட்ரோல் விலை உயர்வு: ஜூலை 5ல் அதிமுக கூட்டணி பந்த்-ஆட்டோக்கள் ஓடாது

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்பட 7 கட்சிகள் பங்கேற்கும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜூலை மாதத்தில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தவிருப்பதாக இடதுசாரிக்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். எனவே இந்த விலை உயர்வை உனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
அதை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.
ஆட்டோக்களும் ஓடாது:
இதற்கிடையே வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில், வருகிற ஜூலை 3ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதைத் தொடர்ந்து ஜூலை 5ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் பங்கேற்போம்.
அன்றைய தினம், அனைத்து வகை ஆட்டோக்களும் ஓடாது. லோடு ஆட்டோக்களும் ஓடாது என்றார்.
பாஜக போராட்டம்-இடதுசாரிகள் பந்த்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் வரும் 1,2ம் தேதிகளில் மாநிலத் தலைநகரங்களில், முக்கிய நகரங்களில் எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.
அதே போல சமாஜ்வாடி- இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 5ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதே தினத்தில் தான் அதிமுக கூட்டணியும் பந்த் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications