மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள்: கருணாநிதி கோரிக்கை-ஏற்ற மம்தா
சென்னை: அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயங்கி வந்ததை மத்திய ரயில்வே துறை முன்பதிவுப் பெட்டிகளாக மாற்றியமைத்தது.
இந்த மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, அந்தப் பெட்டிகளை முன் போலவே முன்பதிவற்ற பெட்டிகளாக ரயில்களில் இணைத்திடக் கோரி ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
முழுவதும் முன்பதிவுடன் இயங்கும் ரயில்கள் அல்லாத அனைத்து மெயில்கள்/ விரைவு ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீ்ண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications