ஜாதிவாரி சென்சஸை வலியுறுத்தி சென்னையில் கூட்டம்-ராமதாஸ்,லாலு பங்கேற்பு
சென்னை: ஜாதி வாரி சென்சஸை வலியுறுத்தி சென்னையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதாகும். 2011-ல் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய உள்ளதால் சாதிவாரி கணக்கும் சேர்த்து எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் வலியுறுத்தி வருவதோடு அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வாதாடி வந்துள்ளதை நாடே அறியும்.
பிரதமர் ஆதரவாக உறுதி அளித்துள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. அரசின் முறையான ஆணை வெளிவரவில்லை.
எனவே சாதிவாரி கணக்கெடுப்பு தவறாமல் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அடையாறு தொலைபேசி நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு, ஏ.கே. மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications