அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர்
மதுரை: தி.மு.க. மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் பழி போடும் நீங்கள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் உங்கள் செல்போனில் இருந்து பேசாமல், வேறு ஒரு செல்போனில் இருந்து ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்டு மதுரை மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சாலைமுத்துவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார் திமுகவைச் சேர்ந்த மேயர் தேன்மொழி கோபிநாதன்.
மதுரை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது நடந்த விவாதத்தின்போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சாலமுத்துவை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மேயர் தேன்மொழி.
முன்னதாக சாலைமுத்து பேசுகையில், கோவில் மாநகரம் தற்போது குப்பை நகரமாக மாறி உள்ளது. சுகாதார துறை உள்பட எந்த துறையிலும் அதிகாரிகள் இல்லை.
புதிதாக கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தி.மு.க. வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்களுக்கு எல்லாம் கடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மேயர் தேன்மொழி மீது கண்டன தீர்மானம் கொண்டு வருகிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட மேயர் தேன்மொழி, இப்படி தி.மு.க. மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் பழி போடும் நீங்கள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் உங்கள் செல்போனில் இருந்து பேசாமல், வேறு ஒரு செல்போனில் இருந்து ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்டதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதை மறுத்த சாலைமுத்து, மேயர் என் மீது கூறிய இந்த குற்றச்சாட்டை நிரூபித்து காட்ட வேண்டும். இல்லையென்றால் மேயர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நான் மு.க.அழகிரியிடம் பேசவில்லை என்றார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் அமளி ஏற்பட்டது. அதன் பின்னரே சாலைமுத்துவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மேயர்.
இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.அப்போது அவர்கள் மீது காகிதத்தில் சுருட்டிய நிலையில் வடையைத் தூக்கி சிலர் வீசினார்.
இதனால் அதிமுகவினர் கடுப்பானார்கள். வடையை வீசி அநாகரிமாக நடந்து கொள்ளாதீர்கள். சாலைமுத்து, மு.க.அழகிரியிடம் செல்போனில் பேசியதற்கு ஆதாரத்தை தர வேண்டும். அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள் என்று கூறியபடி வெளியேறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications