உத்தப்புரம் தலித் மக்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
மதுரை: கைது செய்யப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராம தலித் மக்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி காவல்துறையினர் உத்தப்புரம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்கள் தலைவர்களான சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் அங்கிருந்த தலித் மக்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பாலபாரதி, என். நன்மாறன், எஸ்.கே. மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்து கோவையிலிருந்து திரும்பிய பிறகு இந்த பிரச்சனைக்கு முடிவு எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி கூறினார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
ஜூன் மாதம் 29-ம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியில் வந்தவர்களை பழைய வாரண்ட் இருப்பதாகச் கூறி காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக காவல்துறையினர் தலித் மக்களை கைது செய்தும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள உத்தப்புரம் தலித் மக்களை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications