நாடு முழுவதும் ரூ.3க்கு அரிசி, கோதுமை: புதிய உணவு கொள்கை-அமலாக்க சோனியா தீவிரம்

ஏழை மக்கள் மாதம் முழுவதும் சிக்கலின்றி உணவுப் பொருட்களை பெற இந்த உணவு பாதுகாப்பு சட்ட மசோதா வழி வகுக்கும்.
இந்த மசோதாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி அல்லது கோதுமையை, ஒரு கிலோ ரூ. 3 விலையில் வழங்க வழி செய்யப்படவுள்ளது.
இது குறித்து டெல்லியில் நேற்று சோனியா காந்தி தலைமையில் தேசிய ஆலோசனைக் கவுன்சில் (என்.ஏ.சி.) கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 14 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஏழைகளின் உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் உணவு பாதுகாப்பை சட்டமாக்கி அமல்படுத்துவது குறித்து இந்தக் குழு தீவிரமாக ஆலோசனை நடத்தியது.
உணவு பாதுகாப்பு மசோதாவின் சாதக, பாதகங் அம்சங்கள், நாட்டின் உணவு உற்பத்தி, உணவுத் தேவை ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு தலா 3 ரூபாய்க்கு கோதுமை அல்லது அரிசி வழங்குவது, அதற்கேற்ப நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை தீவிரமாக செயல்படுத்த தனிக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது.
முதலில் உணவு பாதுகாப்பு மசோதாவில் ஏழைகளுக்கு மாதம் 25 கிலோ அரிசி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சர்வதேச நடைமுறைகளின்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவுப் பொருள் வழங்க வேண்டும் என்பது விதியாகும்.
எனவே 35 கிலோ அரிசி அல்லது கோதுமையே வழங்கலாம் என்று சோனியா யோசனை தெரிவித்ததை தேசிய ஆலோசனைக் குழு ஏற்றுக் கொண்டது.
கிலோ ரூ. 3 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கோதுமையை யார் யாருக்கு, எப்படி பகிர்ந்து கொடுப்பது என்பது கடும் சவால் நிறைந்த பணியாகும். இதனால் முதல் ரட்டமாக நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 9 கோடி பேருக்கு மட்டும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை கொடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.
ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்குமே இதை வழங்க வேண்டும், 9 கோடி பேருடன் இத் திட்டத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாது என்று சோனியா கூறியைதயடுத்து நாடு முழுவதிலும் ஏழை மக்கள் அதிகம் வாழும் 150 மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த திட்டத்தை அமலாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 150 மாவட்டங்களிலும் அனைவருக்குமே ரூ. 3க்கு அரிசி, கோதுமை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மற்ற 490 மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வினியோகிக்கப்படும்.
விரைவில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதுமே ஏழைகளின் உணவுப் பஞ்சம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications