என்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக்கால் மின்சாரப் பற்றாக்குறை வராது-மின் வாரியம்

Subscribe to Oneindia Tamil

Power
சென்னை: என்எல்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. நமக்கு தற்போது காற்றாலைகள் மூலம் 1800 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

என்எல்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் இன்று 2வது நாளை தொட்டுள்ளது. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் அது தேவையற்றது என மின்சாரம் வாரியம் கூறுகிறது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த மாதம் வரை மின் உற்பத்தியே இல்லாமல் குறைந்திருந்த காற்றாலையில் தற்போது 1800 மெகா வாட் வரை மின் உற்பத்தி கிடைக்கிறது.

தமிழ்நாட்டிற்கு 9500 மெகாவாட் மின்சார தேவைக்கு காற்றாலை மின்சாரம் மூலம் 1800 மெகாவாட் கிடைப்பது மிகவும் உதவியாக உள்ளது. காற்றாலை மின்சாரம் மூலம் 2500 மெகாவாட் வரை இனி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.எல்.சி.யில் இருந்து தரப்படும் 1000 மெகா வாட்டில் 400 மெகாவாட் மின்சாரம் தான் நமக்கு வந்தது. அதற்கு பதில் கூடுதலாகவே காற்றாலை மின்சாரம் கிடைப்பதால் மின் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+