கி. வீரமணி வீடு மீது தாக்குதல்-3 பெரியார் தி.கவினர் கைது
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகிறார் வீரமணி. நேற்று காலை திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுக்குப் போயிருந்தார் வீரமணி. வீட்டில் மனைவி, மருமகள், வேலையாட்கள் இருந்தனர்.
இந்த நிலையில் மாலை 3 மணியளவில் ஒரு கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தது. நேபாள கூர்க்கா பகதூர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது கூர்க்காவை அக்கும்பலில் இருந்த 3 பேர் மடக்கிப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் உள்ளே போனார்கள்.
உள்ளே சென்ற அக்கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த டொயோட்டோ காரை கடப்பாரையால் அடித்து நொறுக்கினர். இதைப் பார்த்து வீட்டு வேலைக்காரப் பெண் கூச்சலிட்டார். இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடி விட்டது.
விரைந்து வந்த போலீஸார் கூர்க்கா, வேலைக்கார பெண்ணிடம் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வீரமணியின் மேலாளர் சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வந்த வாகனத்தை வேறு எங்கோ நிறுத்திவிட்டு, நடந்தே வந்திருக்கிறார்கள். அவர்கள் கைகளில் கடப்பாரை, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும் 20 வயதிலிருந்து 30 வயது வரை உடையவர்களாக இருந்துள்ளனர். தாக்குதலில் சேதம் அடைந்த கார் ரூ.27 லட்சம் விலை உடையது என்றார் சீதாராமன்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வீரமணி வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதி காப்போம்-வீரமணி அறிக்கை
இந்த தாக்குதல் குறித்து வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
எனது வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி "ஒழிக'' கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்தனர் என்று எனக்கு தகவல் வந்தது. காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை நடத்துகின்றனர்.
கழக தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம். சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.
பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட துரோகங்களை சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால் கூட அல்ல; கணுக்கால் அளவே. எனவே அமைதி காக்க வேண்டும், கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே நமது முதற்கடமை என்பதை மறவாதீர் என்று கூறியுள்ளார்.
பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது:
இந் நிலையில் வீரமணி வீடு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தினார்கள். பலரையும் பிடித்து விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் தாக்குதல் நடத்திய உமாபதி (24), அருண்குமார் (22), மாரிமுத்து (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் இது தொடர்பாக 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications