கொடிக் கம்பம் விவகாரம்-திமுக, அதிமுகவினர் மோதல்-அரிவாள் வெட்டு
கரூர்: கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கொடிகம்பம் அமைக்கும் விவகாரத்தில் திமுக - அதிமுக நிர்வாகிகள் மோதிக் கொண்டதில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கரூர் நகராட்சி்க்கு உட்பட்ட மேட்டுத் தெருவில் அதிமுகவினர் கொடி கம்பம் வைத்து கொடியேற்ற முயற்சி செய்துள்ளனர்.
அப்போது திமுகவினர் அங்கு விரைந்து வந்தனர். அதிமுகவின் கொடி கம்பம், ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு அருகில் இருப்பதால் அதை மறைக்கும் என்பதால் வேறு இடத்தில் வைக்குமாறு கூறினர்.
ஆனால், இஙகுதான் கொடிக் கம்பத்தை வைப்போம் என அதிமுகவினர் பிடிவாதமாக கூறினர். மேலும், அதிமுக மாவ்டடச் செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் கொடிக் கம்பத்தை அங்கேயே வைக்கவும் முயற்சி செய்தனர்.
இதையடுத்து திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு தலைமயில் வந்த திமுக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் அடி பொறுக்க முடியாமல் சாக்கடையில் விழுந்து தப்பித்தனர். இதில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலருக்கு மண்டை உடைந்தது.
பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் கும்பலாக வந்து திமுகவினரை தாக்கினார்கள். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது.
தகவல் அறிந்த எஸ்பி தினகரன் அந்த இடத்தில் ஆயுதம் ஏந்திய போலீசாரை குவித்தார். மோதலில் ஈடுபடுவோர் மீது நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து இரு தரப்பினரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications