கடைகளை அடையுங்கள்-ஆட்டோக்களை ஓட்டாதீர்: வைகோ

பழ. கருப்பையா எழுதியதற்கும், கருத்து சொல்லியதற்கும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். 27ம் தேதி அவரை தாக்கியவர்களை இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டர்கள் என்ன மாயமாகி விட்டார்களா? போலீஸ் கமிஷனரை கேட்கிறேன். ஏன் இன்னும் கைது செய்யவில்லை?.
டைரக்டர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதில் கூட இன்று வரை யாரையும் போலீஸ் பிடிக்கவில்லை. தாக்கியவர்கள் வந்த கார் நம்பர் உள்பட புகாரில் சொல்லியும் எந்த பயனுமில்லை.
விக்கிரவாண்டியில் ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. அப்போது அருகில் துண்டு பிரசுரம் ஒன்று கிடந்தது. அதில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் மீது அபாண்டமாக பழி போடுவதற்காக அந்த துண்டுப் பிரசுரம் போடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி விண்ணை தொட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். அதற்காக 5ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நிறிவித்துள்ளோம்.
கடந்த முறை எப்படி முழு வெற்றி கொடுத்தீர்களோ அதுபோல இப்போதும் கொடுங்கள். நீங்களாகவே கடைகளை அடையுங்கள். ஆட்டோக்களை ஓட்டாதீர்கள். பஸ்களை ஓட்டாதீர்கள். இதன் மூலம் நமது ஒருமித்த கண்டனத்தை தெரிவிக்க முடியும் என்றார்.
ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம்: மன்னிக்க முடியாது:
முன்னதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ,
ஜூன் 8ம் தேதி ராஜபக்சே டெல்லி வந்தபோது அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மன்னிக்க முடியாத துரோகச் செயல்.
பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில் இலங்கைக்கு ராணுவத் தளவாடங்கள் விற்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை மறந்து காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளை செய்து, தமிழ் மக்களை அழிக்க போர் நடத்தியது என்றார் வைகோ.
என்எல்சி பிரச்சனை-சுமுகத் தீர்வு காண வேண்டும்:
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 30 ம் தேதி இரவுப் பணியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு நாட்களாகப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஆகியோரைக் கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந் நிலையில் இன்று முதல், அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்துள்ளன.
என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், மின் உற்பத்தி குறைந்து, தமிழகம் இருளில் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
எனவே, மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications